கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா - வை புகழ்ந்த , முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் !!
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா. இவர் இதுவரை 224 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 9,115 ரன்கள் மற்றும் 29 சதம் அடித்துள்ளார். அவர் அதிகபட்ச ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
இதில் மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார். துவக்க ஆட்டக்காரராக 140 ஒருநாள் போட்டிகளில் 7,148 ரன்கள் அடித்துள்ளார். அதில் 27 சதங்களை அடித்துள்ளார். இவர் சச்சின் மற்றும் தென் ஆப்பிரிக்கா வீரர் ஆம்லாவை பின் தள்ளி உள்ளார்.
ஒரு உலகக் கோப்பைப் தொடரில் 5 சதங்கள் அடித்து வரலாறு சாதனை படைத்துள்ளார். இதை பற்றி கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியது: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா.
அவர் மூன்று முறை இரட்டை சதங்கள் உள்பட பல சதங்களை அடித்துள்ளார். அவர் டாப் 3 அல்லது 5-யில் சிறப்பான துவக்க வீரர்களில் ஒருவராக இருக்க தகுதி இருக்கிறது. இது தான் ரோஹித் சர்மாவின் சிறப்பு ஆகும் என இவ்வாறு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
Newstm.in