1. Home
  2. தமிழ்நாடு

சாகித்ய அகாடமியின் முன்னாள் தலைவரும் மலையாள எழுத்தாளருமான பி.வல்சலா காலமானார்...!

1

வயநாடு வட்டார பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பதிவு செய்த ‘நெல்லு’ என்ற நாவலின் மூலமாக பி.வல்சலா கேரளாவுக்கும் வெளியே பெருவாரியாக அறியப்பட்டார். 1972-ல் வெளியான இந்த நாவலை அடுத்து வல்சலாவின் படைப்புகள் தேசிய அளவில் கவனம் பெற்றன.

அவர் படைத்த விலாபம், கானல், பாளையம் உள்ளிட்ட பல்வேறு நாவல்கள் மற்றும் சிறுகதைகள், பி.வல்சலாவை மலையாள மரபின் பெரும் எழுத்தாளர்கள் வரிசையில் இருத்தின. கேரள சாகித்ய அகாடமி விருது, எழுத்தச்சன் விருது, சி.வி.குன்னிராமன் நினைவு சாகித்ய அகாடமி விருது உட்பட பல்வேறு விருதுகளை பி.வல்சலா பெற்றிருக்கிறார்.

சாகித்ய அகடாமி நிறுவனத்தின் தலைவராகவும் பி.வல்சலா பணிபுரிந்துள்ளார். கணவர் அப்புக்குட்டி, மகன் அருண் மற்றும் மகள் மினி ஆகியோருடன் வாழ்ந்து வந்த வல்சலா, வயது மூப்பு தொடர்பான உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாகி கோழிக்கோடு தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை தொடர்ந்த நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். வல்சலாவின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


 


 


 

Trending News

Latest News

You May Like