1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் துரை. ராமசாமி காலமானார்!

Q

முன்னாள் முதல்வர் காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலில் வந்த துரை ராமசாமி 10 ஆண்டு காலம் வெள்ளக்கோயில் ஊராட்சிமன்றத் தலைவராகவும், 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.

மேலும், தர்மயுத்தத்தின்போது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவும் அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

இந்த நிலையில் இன்று காலை வயது மூப்பு காரணமாக துரை.ராமசாமி காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

Trending News

Latest News

You May Like