1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் பிரதமர் மார்க் ரூட் எளிமையாக சைக்கிளில் சென்றது கவனத்தையும் ஈர்த்துள்ளது..!

1

நெதர்லாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மார்க் ரூட். இவர் ஒரு வலதுசாரி ஆதரவாளர். இந்த நிலையில் மார்க் ரூட், வரும் அக்டோபர் மாதம் நேட்டோ பொதுச் செயலாளராக பதவியேற்கவுள்ளார். 

முன்னதாக, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அடுத்த நெதர்லாந்து பிரதமராக டிக் ஸ்கூப்  தேர்வு செய்யப்பட்டார்.  அவருக்கு, அந்த நாட்டு மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

தி ஹேக் நகரில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில், அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட மார்க் ரூட், அனைவருக்கும் நன்றி தெரிவித்தபடி பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் எளிமையாக சைக்கிளில் சென்றது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

Trending News

Latest News

You May Like