1. Home
  2. தமிழ்நாடு

பொன்னேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்..!

Q

திமுக முன்னாள் அமைச்சர், பொன்னேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., க.சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 76. 1989 ஆம் ஆண்டு கலைஞர் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் க.சுந்தரம். திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். கடந்தாண்டு திமுக முப்பெரும் விழாவில் க.சுந்தரத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘அண்ணா விருது’ வழங்கி கெளரவித்திருந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக க.சுந்தரம் இன்று காலமானார். அவருக்கு திமுக தொண்டர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Trending News

Latest News

You May Like