முன்னாள் MLA துக்காராம் பிட்கர் சாலை விபத்தில் பலி..!

முன்னாள் MLA துக்காராம் பிட்கர் (73) சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அகோலா நகரின் ஷிவ்னி பகுதியில் துக்காராம் பைக்கில் சென்றபோது பிக்கப் வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், அவருடன் பைக்கில் சென்ற ராஜ்தத்தா மான்கர் (48) என்பவரும் உயிரிழந்தார். துக்காராம் பிட்கர் 2004 முதல் 2009 வரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் MLA-வாக பதவி வகித்தார்