முன்னாள் எம்எல்ஏ தமிழ்மொழி ராஜதத்தன் காலமானார்..!
அதிமுக முன்னாள் எம்எல்ஏ தமிழ்மொழி ராஜதத்தன் காலமானார்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தமிழ்மொழி ராஜதத்தன் காலமானார்.
உடல் நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்மொழி ராஜதத்தன் மறைவுக்கு அதிமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.