1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் உடல்நலக்குறைவால் காலமானார்..!

1

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இ.ராமகிருஷ்ணன். மருத்துவரான இவர் தி.மு.க.வில் செயல்பட்டு வந்தார். அச்சரப்பாக்கம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 1984-ம் ஆண்டு போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

இதையடுத்து 1989-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க. சார்பில் நின்று வெற்றி பெற்றார். கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு தி.மு.க.வில் இருந்து கட்சி மாறி அ.தி.மு.க.வில் இணைந்த இ.ராமகிருஷ்ணன், 1991-ல் அதே அச்சரப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றார். 

1991 முதல் 1995 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து, அ.தி.மு.க.வில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் இ‌. ராமகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 76. முன்னாள் அமைச்சர் இ.ராமகிருஷ்ணன் மறைவு அப்பகுதி அ.தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News

Latest News

You May Like