1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் குட்டி அகமது குட்டி காலமானார்..!

Q

கேரள முன்னாள் அமைச்சர் குட்டி அகமது குட்டி (71) காலமானார். வயது மூப்பு காரணமாக தனுரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஆக.11) காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மூத்த தலைவரான இவர் 2004-06ஆம் ஆண்டு உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்துள்ளார். தொடர்ந்து 2005ஆம் ஆண்டில் நிகழ்ந்த கார் விபத்துக்குப் பிறகு அவர் சில ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.

தற்போது தமுமுகவின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள குட்டி அகமது குட்டி, கட்சியின் மாநில துணைத் தலைவராகவும், மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 1992 இடைத்தேர்தலில் தனுரில் இருந்து எம்எல்ஏவாகவும், பின்னர் 1996 மற்றும் 2001 இல் திருஅங்காடியில் இருந்தும் எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் வயது தொடர்பான நோய்களால் குட்டி அகமது குட்டி தனுரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு வயது 71. குட்டி அகமது குட்டி மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like