டீசல் விலையை குறையாததால் மாட்டு வண்டியில் பயணித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

சென்னையில் வாக்காளர் பெயர் நீக்கம் மற்றும் சேர்த்தல் முகாமை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தன் காரில் சென்ற அவர் திடீரென மாட்டு வண்டியில் பயணித்தார்.
சென்னை பழைய வண்ணாரபேட்டை சாலையில் அவரது கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் ஒற்றை மாட்டு வண்டி சென்றது. இதை பார்த்த ஜெயக்குமார் தனது காரில் இருந்து இறங்கினார். அதன்பிறகு அவர் அந்த மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்து ஓட்டினார். நாட்டில் டீசல் விலை அதிகரித்துள்ளதாலும், திமுக டீசல் விலையை குறைப்பதாக கூறிவிட்டு குறைக்காமல் இருக்கும் நிலையில் இந்த பயணம் தான் சரியானது என கூறியபடி சென்றார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநில முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் பல்வேறு வகையான நோய்கள் சர்வ சாதாரணமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என தெரிவித்தார்.