1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகினாரா? உண்மை நிலவரம் இதோ..!

1

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்து வந்தது. அதன் விளைவாக 11ந் தேதி (நேற்று) பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி செய்தார். இது அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளது. இந்த நிலையில் டி.ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகியதாக தகவல்கள் பரவி வருகிறது.
 

பாலிமர் செய்தி நிறுவனம் பெயரில் நியூஸ் கார்ட்டு ஒன்று வைரலானது. அதில்," பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் கட்சியில் இருந்து நான் விலகுகிறேன். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் வழியில் என் அரசியல் பயணம் தொடரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாக பாலிமர் செய்தி நிறுவனம் பெயரில் நியூஸ் கார்ட் வைரலாக பரவி வருகிறது.

உண்மை என்னவென்றால் வைரலாகும் டி.ஜெயக்குமார் பதிவு போலியானது .பாஜகவுடன் அதிமுக கூட்டணி அறிவித்ததால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் இருந்து விலகியதாக பரவும் தகவல் பொய்யானது

அண்மை காலங்களில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்ட நிலையில், நேற்று அதிகாரப்பூர்வமாக அமித்ஷா அதனை அறிவித்தார். இந்த அறிவிப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்காக யாரும் அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்று இதுவரை கூறவில்லை. அதேபோல் தான் டி.ஜெயக்குமார் விலகியதாக பரவும் செய்தியும் போலியாக எடிட் செய்யப்பட்டது. இதனை யாரும் நம்ப வேண்டாம்.

Trending News

Latest News

You May Like