முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியுமான தங்கமணிக்கு டெங்கு..!

அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான தங்கமணி லேசான காய்ச்சல் காரணமாக, நள்ளிரவு 01.00 மணியளவில் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிச் செய்யப்பட்டது. இதையடுத்து, அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், தங்கமணியின் உடல்நிலையைத் தொடர்ந்துக் கண்காணித்து வருகின்றனர்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.