தமிழக லோக் ஆயுக்தாவின் தலைவராக சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி நியமனம்..!

பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட அமைப்பு லோக் ஆயுக்தா. சுதந்திரமான இந்த அமைப்பின் தலைவராக தலைவராக சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பொறுப்பு தலைவராக இருந்து வந்தார்.
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ராமராஜ் மற்றும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினரான வழக்கறிஞர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் நீதித்துறை சாராத உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.