1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்..!

1

கடந்த 1946- ஆம் ஆண்டு செப்டம்பர் 25- ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் பிறந்தவர் பிஷன் சிங் பேடி. இந்திய கிரிக்கெட் அணியில் 1966- ஆம் ஆண்டு முதல் 1979- ஆம் ஆண்டு வரை விளையாடி உள்ளார். 67 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய உள்ள இவர், 266 விக்கெட்டுகளையும், 656 ரன்களையும் எடுத்துள்ளார். அதேபோல், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

கடந்த 1969- ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும், 1970- ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் வழங்கி மத்திய அரசு கௌரவப்படுத்தியது.

அண்மைகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிஷன் சிங் பேடி, இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். .

மொத்தம் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளையும், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்திய அணிக்கு கேப்டனாகவும் இவர் செயல்பட்டுள்ளார். 

லெக் ஸ்பின்னரான இவர் இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இங்கிலாந்தில் நடைபெற்ற 1975ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கிழக்கு ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்தியா அந்த வெற்றியை பெற்றது. அந்த போட்டியில் பிஷன் சிங் பேடி 12 ஓவர்கள் வீசி 6 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அதில் 8 ஓவர்கள் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like