1. Home
  2. தமிழ்நாடு

ஜூப்லி ஹில்ஸில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்..!

1

நாடு முழுவதும் ஐந்து மாநில தேர்தல் ஜூரம் பிடித்துள்ளது. இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. 5 மாநிலங்களில் ஒரே தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவில் மும்முனை போட்டி நிலவுகிறது.

தெலங்கானாவில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 30- ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், வேட்பாளர்களை அறிவித்து, வாக்குச் சேகரிக்கும் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி, தற்போது 45 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் களமிறக்கி காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. இந்த இரண்டாம் கட்ட பட்டியலுடன் இதுவரை 100 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களும், தொண்டர்களும் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இவர் ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்நிலையில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு  அசாருதீன் நன்றி தெரிவித்துள்ளார்.மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமைக்கு நன்றி தெரிவித்துள்ள அசாருதீன், கடவுளின் ஆசீர்வாதத்துடன் தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like