1. Home
  2. தமிழ்நாடு

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து முன்னாள் வீரர் அதிருப்தி..!

1

விரைவில் நடைபெற இருக்கும் உலக கோப்பையில் விளையாட போகும் தங்களது அணியின் பட்டியலை அனைத்து நாடுகளும் வெளியிட்டு வரும் நிலையில் ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது .

ரோஹித் (கேப்டன்), ஜெய்ஸ்வால், கோலி, சூர்யகுமார், பண்ட் (வி.கீ), சஞ்சு சாம்சன் (வி.கீ), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), துபே, ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ், கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத், ஆவேஷ் கான் உள்ளிட்டோர் இந்திய அணியின் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் பலருக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அதிலும் குறிப்பாக இந்த பட்டியலில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறாமல் போனது பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியதாவது :

T20 WC இந்திய அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறாமல் இருப்பது வருதுதமாக உள்ளது . ரிங்கு சிங்கை எப்படி விட்டார்கள் என்றே புரியவில்லை. ஜெய்ஸ்வாலை தூக்கிட்டு ரிங்குவை எடுத்திருக்கலாம். இது மிகப்பெரிய அநியாயம்.

எதுக்குங்க 4 ஸ்பின்னர்? கும்பலோடு சேர்ந்து கோவிந்தா போடற மாதிரி.. என்ன மாதிரியான தேர்வு இது? ரிங்கு சிங் என்ன பலி ஆடா?

வாரி வழங்கும் வள்ளல் சிராஜுக்கு பதிலாக நடராஜனையும், சுப்மன் கில்லுக்கு பதிலாக ருதுராஜையும் ரிசர்வில் வைத்திருக்கலாம். கில் Totally out of form என முன்னாள் கிரிக்கெட் வீரர் ருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like