விமான விபத்தில் சிக்கிய குஜராத் முன்னாள் முதல்வர் ..!

ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் செல்லும் பயணிகள் விமானம் இன்று மதியம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். கிளம்பியதும் அந்த விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. 242 பேரின் நிலை என்ன வென்று தெரியவில்லை.
இந்நிலையில் ராம் மோகன் நாயுடு பதிவிட்டுள்ளதாவது:
ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும் பேரழிவும் அடைந்தேன். நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். நான் தனிப்பட்ட முறையில் நிலைமையைக் கண்காணித்து வருகிறேன், மேலும் அனைத்து விமானப் போக்குவரத்து மற்றும் அவசரகால மீட்பு நிறுவனங்களும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். மீட்புக் குழுக்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன, மேலும் மருத்துவ உதவி மற்றும் நிவாரண உதவி சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமானத்தில் இருந்த அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் பிரார்த்தனை செய்கிறேன்.
இவ்வாறு ராம் மோகன் நாயுடு பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணியும் பயணிகள் பட்டியலில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது அவரது கதி என்ன என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.