1. Home
  2. தமிழ்நாடு

திமுக முன்னாள் எம்எல்ஏ திடீரென காலமானார்.. தொண்டர்கள் அதிர்ச்சி !

திமுக முன்னாள் எம்எல்ஏ திடீரென காலமானார்.. தொண்டர்கள் அதிர்ச்சி !


வேதாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ மா.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார்.

நாகை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்தார். பின்னர் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்ட அவருக்கு வேறு பதவி வழங்கப்பட்டது.

சென்னையில் கடந்த 15ஆம் தேதி நடந்த முப்பெரும் விழாவில் மீனாட்சி சுந்தரத்திற்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் இவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதையடுத்தது மீனாட்சிசுந்தரம் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூன்று முறை வேதாரண்யம் எம்எல்ஏவாக இருந்த சுந்தரத்திற்கு திமுக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like