முன்னாள் டிஜிபி ராஜ்மோகன் காலமானார்..!

தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபியாக பணிபுரிந்த ராஜ்மோகன் (87) சென்னையில் இன்று (மே 30) காலமானார். 1995 மே மாதம் முதல் 1995 ஜூலை மாதம் வரை டிஜிபியாக பணியாற்றிய அவர், பணி ஓய்வுக்கு பிறகு சென்னையில் வசித்து வந்தார்.
இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். அவர் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.