1. Home
  2. தமிழ்நாடு

கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை !

கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை !


இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் இந்தியாவை மற்ற நாட்டு வீரர்கள் சிலர் கேலி பேசிய போது, 434 விக்கெட்டுகளை வீழ்த்தி ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை அடித்து உடைத்து சாதனை படைத்தார்.

1983-ம் ஆண்டில் இந்தியா முதல் முறை உலகக் கோப்பையை வென்றபோது, அணியின் கேப்டனாக வழி நடத்தியவர்.உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரான தனது 175 நாட் அவுட் இன்னிங்சை நீண்ட காலம் சிறந்த உலகக்கோப்பை இன்னிங்சாக தக்க வைத்திருந்தவர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கபில் தேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.மருத்துவமனையில் கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கபில் தேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து அவது ரசிகர்கள் மற்றும் அபிமானிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like