1. Home
  2. தமிழ்நாடு

சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ காலமானார்!

சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ காலமானார்!


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கோவை சிங்காநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.சி. கருணாகரன் காலமானார். அவருக்கு வயது 74.

இவர் 23 ஆண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், 1997 முதல் 2001 வரை சிபிஎம் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தார்.

அதனைத் தொடர்ந்து 2001 முதல் 2006 வரை சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும், சோசலிஸ்ட் வாலிபர் சங்கத்தின் முதல் மாநில தலைவராகவும் பணியாற்றியவர்.

சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ காலமானார்!

உப்பிலியபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சிபிஎம் கோவை மாவட்டக்குழு அலுவலகத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு கருணாகரனின் உடல் பாப்பநாயக்கன்பாளைய மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

newstm.in

Trending News

Latest News

You May Like