1. Home
  2. தமிழ்நாடு

கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்திகுமாருக்கு ரூ. 10,000 அபராதம்..!

1

கோவையில் 74 வயது முதியவர் ஜான் சாண்டிக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில் சட்டவிரோதமாக இரண்டு பேர் சேர்க்கப்பட்டது தொடர்பான வழக்கில் பட்டா ஆவணத்தில் உள்ள 2 பேரின் பெயர்களை நீக்க 2023 ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்த காலத்தில் அமல்படுத்தவில்லை என்று கூறி அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வட்டாட்சியருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியராக 2023 ஜனவரி 30 முதல் மே 2025 வரை பணியாற்றிய கிராந்திகுமார் பாடி, 2016 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் பணியில் சேர்ந்தார். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். கோவை மாவட்டத்திற்கு முன்னதாக, திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றியுள்ளார். அதற்கு முன், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் செயல் அலுவலராகவும், ஈரோடு வணிகவரி மற்றும் ஜிஎஸ்டி இணை ஆணையராகவும், நாமக்கல் சப் கலெக்டராகவும், அஞ்சல் துறையில் இணைச் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

Trending News

Latest News

You May Like