முன்னாள் முதல்வரின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி..!
தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மேலவை உறுப்பினரான கவிதா, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்து கவிதா மார்ச் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
தில்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்ட கவிதாவுக்கு 5 மாதங்களுக்கு பிறகு ஆகஸ்ட் 27-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிரிய சமிதியின் மூத்த தலைவருமான கவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று இரவுக்குள் வீடு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் கவிதாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.