1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்..!

1

ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெய்லர் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. ஜெய்லர் வெளியாவதற்கு முன்பே அவர், இமயமலைக்கு தனது ஆன்மிகப் பயணத்தை தொடங்கினார். ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை எனத் தொடர்ந்து பயணித்தவர்  உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்தார்.   கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான நிலையில், 600 கோடிகள் வசூலைக் கடந்து இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. மேலும், ஓ.டி.டி-யில் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது. 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் அவரை மரியாதை நிமித்தமாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார்.சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் ஓ பன்னீர்செல்வம் சென்று சந்தித்து பேசியுள்ளார். 

 இருவரும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

Trending News

Latest News

You May Like