முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் மாநாடுகளை நடத்த தவெக திட்டம். ?

தவெக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, கடந்த 2-ந்தேதி முதல் ஆண்டு நிறைவடைந்து, 2-வது ஆண்டு தொடங்கியுள்ளது. கட்சியின் உள் அமைப்பை வலுப்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய் நியமித்து வருகிறார்.
இதுவரை 5 கட்டங்களாக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை உருவாக்குவதில் விஜய் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலுக்கு முன்னர் மண்டல அளவில் 4 மாநாடுகளை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சியாக இருந்தால், தேர்தலுக்கு முன் பிரமாண்ட பொதுக்கூட்டங்களை ஜெயலலிதா நடத்துவார். அவரது பாணியில், மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் மாநாடுகளை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.