முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்!

மனோகர் சிங் கில், கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தலைமை தேர்தல் கமிஷனராக பதவி வகித்தவர். உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திரு.எம்.எஸ்.கில், தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சைப் பலனளின்று நேற்று காலமானார்.
1958- ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்தவரான மனோகர் சிங் கில், பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளக் கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், முதலமைச்சராக இருந்த போது, இளம் அதிகாரியாக பணியாற்றியவர்.
2008ல் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
எம்.எஸ்.கில்லுக்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். அவரது உடல் டெல்லியில் இன்று அக்டோபர் 16ம் தேதி திங்கட்கிழமை தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.கில் மறைவிற்கு பிரபலங்கள், தலைவர்கள், கட்சி தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.