1. Home
  2. தமிழ்நாடு

மருத்துவர்கள் மரணம் என அறிவித்த பாஜக முன்னாள் தலைவர் இறுதி சடங்கில் உயிருடன் எழுந்ததால் பரபரப்பு..!!

1

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் மகேஷ் பாகேல். இவர் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில், பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் ஆவார். இவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, உறவினர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர், ஆனால் சிறிது நேரம் கழித்து, உடலில் அசைவு ஏற்பட்டதால், மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். . மருத்துவமனைக்கு சென்ற பிறகு அவர் மீண்டும் உயிருடன் இருப்பது தெரியவந்தது. அவரை உயிருடன் பார்த்ததும் உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சி அலை வீசியது.

மகேஷ் பாகேலின் குடும்ப உறுப்பினர்களின் கூறுகையில், புஷ்பாஞ்சலி மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டபோது, ​​​​சராய் குவாஜாவில் உள்ள தங்கள் வீட்டிற்கு அவரை அழைத்து வந்தனர். இறந்த துக்கத்தில் இருந்த உறவினர்கள், பாகேல் கண்களைத் திறந்ததையும், அப்போது அவரது உடலில் அசைவு இருப்பதையும் கவனித்தனர். உடனடியாக உறவினர்கள் பாகேலை நியூ ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் பாகேலின் சகோதரர் லகான் சிங் பாகேல் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 

Trending News

Latest News

You May Like