வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் ரத்து..!
வங்கதேசத்தில் கடந்த மாதம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சுமார் ஒரு மாதம் வரை நீடித்தது. இதன் காரணமாக இந்த மாதம் 5-ந்தேதி ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 21 பேர் இடம் பிடித்துள்ளனர். ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றம் பதியப்பட்டு வங்கதேச போர்க்குற்ற நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதாக வங்கதேச இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவு ஷேக் ஹசீனாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. டிப்ளோமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டியதில்லை.
வங்கதேச பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பராளுமன்றத்தில் உள்ள முக்கிய தலைவர்களுக்கு டிப்ளோமேடிக் பாஸ்போர்ட் வழங்கப்படும். தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் ரத்து செய்யப்படுவதாக இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
இனிமேல் ஷேக் ஹசீனா வழக்கமான நடைமுறையின்படி பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன்பின் பார்ஸ்போர்ட் வழங்கப்படும்.