1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் சுந்தரராஜன் பத்மநாபன் காலமானார்..!

1

கடந்த 1940ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், 1959ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்தார். முதலில் பீரங்கி படையில் இருந்த இவர், தனது திறமையால் தொடர்ந்து உயர் பதவிக்கு உயர்ந்தார். குறிப்பாக 1993ம் ஆண்டு முதல் 1995 வரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் XV கார்ப்ஸின் ஜெனரல் அதிகாரியாக இவர் பதவி வகித்திருக்கிறார். இந்த காலத்தில், காஷ்மீரில் கலவரக்கார்களை பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார். இது அதற்கு முன்னர் யாரும் செய்திராத செயலாகும்.

சுந்தரராஜனின் ராணுவ யுத்தியை பாராட்டி இவருக்கு அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் (AVSM) வழங்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு பதவிகளை வகித்து வந்த இவர் கடந்த 2000ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பதவி உயர்ந்தார். இரண்டாண்டு காலம் இந்த பதவியில் இருந்த அவர் 2002ம் ஆண்டு பதவி ஓய்வு பெற்று சென்னையில் குடியேறிவிட்டார்

இந்நிலையில் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் சுந்தரராஜன் பத்மநாபன் (83) வயது மூப்பு காரணமாக இன்று (ஆகஸ்ட் 19) சென்னையில் காலமானார். 

 திருவனந்தபுரத்தில் பிறந்த ஜெனரல் பத்மநாபன், டேராடூனில் உள்ள புகழ்பெற்ற ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, புனேவில் உள்ள என்டிஏவின் முன்னாள் மாணவரும் ஆவார்.

Trending News

Latest News

You May Like