அதிமுக முன்னாள் எம்பி பாஜவில் இணைந்தார்..!
சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்.பி., விஜயகுமார், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையா தேவரின் மகன் முத்துராமலிங்கம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பரப்புரை செயலாளராக கோவையைச் சேர்ந்த அனுஷா ரவி ஆகியோர் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று பாஜவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை அண்ணாமலை, எல்.முருகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பாஜவில் இணைந்த அனுஷா ரவி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பரப்புரை செயலாளராக பதவி வகித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அந்த பதவியில் அவர் இருந்து வந்தார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அனுஷா ரவி இன்று அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவரான கமல்ஹாசனுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் தான் அவர் பாஜவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது