திமுக அமைச்சருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பகிரங்க மிரட்டல்..!

கீழடி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து திமுக ஐடி விங் வெளியிட்ட கார்ட்டூனுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக ஐடி விங் செயலாளர், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மிரட்டல் விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசுகையில், "கீழடி அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கியது அதிமுக ஆட்சியில் தான். அதிமுக குறித்து அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழகத்திலேயே நடமாட முடியாது. அதிமுக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவார்கள். கீழடி குறித்து திமுகவுடன் விவாதிக்க தயார்" என தெரிவித்துள்ளார்.