1. Home
  2. தமிழ்நாடு

ராகுல் காந்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் புகழாரம்..!​​​​​​​

1

இன்று ராஜீவ்காந்தியின் 33-வது ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் வளைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ராகுல்காந்தியின் வீடியோவை பதிவேற்றம் செய்து, அவர் குறித்து புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் நான் பார்த்து, நெகிழ்ந்து, ரசித்த இளம் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தி மக்களுடன் மக்களாக சகஜமாக உரையாடுகிறார்..இந்நிலையில் ராகுல் காந்தி குறித்து திடீரென வீடியோ வெளியிட்டு செல்லூர் ராஜூ நெகிழ்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like