அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் திடீர் அனுமதி..!
நேற்று ஜூலை 30ம் தேதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் பங்கேற்றிருந்தார்.. கூட்டம் நடந்து கொண்டேயிருக்கும்போது, நத்தம் விஸ்வநாதனுக்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து, நரம்பியல் பிரச்சனை காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.. எனவே ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார் நத்தம் விஸ்வநாதன்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது... தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனின் உடல்நிலையை அருகிலிருந்து கவனித்து வருகிறார்கள்.
இதனிடையே, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அமைச்சர் ஐ.பெரியசாமி காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
.png)