குண்டை போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..! அம்மாவின் பணத்தை வைத்து சசிகலா, தினகரன்...
அதிமுக மாவட்ட அலுவலகத்தில் கள ஆய்வு ஆலோசனை கூட்டம் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “ ஒரு குடும்பமாக கூட்டணிக்கு ஆகின்ற செலவுகள் குறித்து நான் பேசினேன். இரண்டு நாட்களில் நானும் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் கதாநாயகனாக மாறிவிட்டோம் என்றார்.
ஒரு குடும்பமாக பேசும்போது செலவு எவ்வளவு ஆகிறது என்று சாதரணமாக பேசினேன். அது பெரிதாகிவிட்டது. செய்தியாளர்கள் சரியாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று நக்கல் அடித்தபடி பேசிய அவர், “நான் சொன்னது என்ன? என்று கேள்வி எழுப்பி கூட்டணி குறித்து தலைமை நிர்வாகிகள் யாரும் பேச கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார் என்றார்.
ஒரு குடும்பமாக எவ்வளவு செலவாகிறது என்றுதான் நான் பேசினேன்.ஆனால் அதிமுகவுக்கு யாரும் கூட்டணி வருவதில்லை என்று செய்திகள் வருகிறது. நான் அப்படி பேசவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார். மேலும், அம்மாவுக்கு உதவியாக வந்தவர்கள் தான் சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்கள் அவர்களால் தற்போது அம்மாவின் பணத்தை வைத்து 1000 குடும்பங்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள் என்று விமர்சித்தார். அந்தப் பணத்தை வைத்துக்கொண்டுதான் சசிகலா தினகரன் ஆகியோர் ஆட்சியை பிடிப்போம் என்று கூறி வருகிறார்கள் ”என்றும் நக்கல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “நமது குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கலாம். அதை மூன்றாவது மனிதர்கள் தலையிட ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அதேபோல்தான் இது நமது குடும்ப பிரச்சினை என்று தெரிவித்தார். இங்கு நடக்கும் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்ற ஒரே கருத்தோடு அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், திருச்சியில் நான் பேசியது வேறு.ஆனால் தொலைக்காட்சிகளில் வந்தது வேறு என்று கூறினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு சிபிஐ ரூ.15 கோடி, சிபிஎம் ரூ.10 கோடி, கொங்கு வேளாளர் ஈஸ்வரனுக்கு ரூ.15 கோடி என பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என்று பகிரங்கமாக தெரிவித்தார்.
#WATCH | “அம்மாவின் பணத்தை வைத்து சசிகலா, தினகரன் குடும்பத்தில் 1,000 பேர் கோடீஸ்வரர்களாக ஆகிவிட்டனர்”
— Sun News (@sunnewstamil) November 21, 2024
-நாகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!#SunNews | #AIADMK | #DindigulCSreenivasan pic.twitter.com/LqzpoFfbR1
#WATCH | “அம்மாவின் பணத்தை வைத்து சசிகலா, தினகரன் குடும்பத்தில் 1,000 பேர் கோடீஸ்வரர்களாக ஆகிவிட்டனர்”
— Sun News (@sunnewstamil) November 21, 2024
-நாகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!#SunNews | #AIADMK | #DindigulCSreenivasan pic.twitter.com/LqzpoFfbR1