1. Home
  2. தமிழ்நாடு

திமுகவில் இணைந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் அன்வர் ராஜாவிற்கு முக்கிய பொறுப்பு - துரைமுருகன் அறிவிப்பு..!

1

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார் அன்வர் ராஜா. அவர் அண்ணா அறிவாலயம் வருகை தந்த செய்தி வெளியானதுமே அவரை அதிமுகவிலிருந்து நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

அ.தி.மு.க.,வின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்த அன்வர் ராஜா, 2021 ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைந்தார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, அ.தி.மு.க., ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்.பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., மீண்டும் கூட்டணி வைத்ததால், அன்வர் ராஜா அதிருப்தி வெளிப்படுத்தி இருந்தார். தமிழகத்தில் ஒரு போதும் பா.ஜ., கால் ஊன்ற முடியாது என்று அண்மையில் அன்வர் ராஜா பேட்டி அளித்தார். அவரது பேட்டி அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர், சென்னையில் உள்ள தி.மு.க., வின் தலைமை அலுவலகத்திற்கு வந்த அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 

இந்நிலையில் திமுகவில் இணைந்த அன்வர் ராஜா அவர்களுக்கு தி.மு.க.வில் இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புலவர் இந்திரகுமாரி வகித்து வந்த தி.மு.க. இலக்கிய அணி தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா நியமிக்கப்படுகிறார். தி.மு.க. சட்ட திட்ட விதி 31, பிரிவு 10-ன்படி தி.மு.க. இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like