1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் காட்டெருமை தாக்கியதில் வனக்காவலர் உயிரிழப்பு..!

1

கோவை மாவட்டம் தடாகம் வனப்பகுதிக்கு உட்பட்ட தோலம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய பகுதியில் புகுந்த காட்டெருமை ஒன்றை விரட்டும் பணியில் கடந்த மார்ச் 10ம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பணியில் ஈடுபட்ட அசோக் குமார் எனும் வனக்காவலரை காட்டெருமை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.அவரை உடனே சீலியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்து அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 

அங்கு 2 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Trending News

Latest News

You May Like