விரைந்த தடயவியல் நிபுணர்கள்..! பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை..!

டிஸ்யூம், வேட்டைக்காரன், காதலில் விழுந்தேன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. மேலும் இவர் நான், சைத்தான், காளி, பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தவர். விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இவருடைய மூத்த மகள் மீரா, சென்னை இசர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். மீராவின் அறை கதவு வெகுநேரமாக திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்துக் கொண்டு அவருடைய பெற்றோர் உள்ளே சென்றனர். அப்போது மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த மீராவை அவருடைய பெற்றோர் மீட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவர் அதிகாலை 3 மணி அளவில் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக அவரது செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மீரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து விஜய் ஆண்டனி இல்லத்தில் தேனாம்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீரா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீரா தற்கொலை செய்து கொண்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் ஆண்டனியின் வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மீராவுக்கு மனஅழுத்தம் இருந்தா என்பது குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும், மீரா பயன்படுத்தி வந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், மனஅழுத்தம் காரணமாக கடந்த 6 மாதமாக மீரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இறகு பந்து திறமைசாலியான நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.