1. Home
  2. தமிழ்நாடு

இரண்டு நாட்களுக்கு பா.ஜ.க. நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து- அண்ணாமலை..!

1

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவனர் பங்காரு அடிகளார் முக்தி அடைந்தார் என்ற செய்தியை தொடர்ந்து அம்மாவின் பிரிவு துயராற்ற, இரண்டு நாட்களுக்கு நமது கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

நடைபயணத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துவிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் காத்திருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், பா.ஜ.க. சகோதர, சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், தவிர்க்கவியலாத காரணத்தினால், நடைபயணத்தில் ஏற்பட்டுள்ள இந்த தேதி மாற்றத்தைப் பொறுத்தருள வேண்டிக் கொள்கிறேன்.

திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான நடை பயண தேதி விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like