அமெரிக்காவில் முதன் முறையாக புது சட்டம்...ஹிந்து குறித்து அவதூறு பேசினால் தண்டனை..!
ஜார்ஜியா மாநிலம் இந்து வெறுப்பு மற்றும் இந்து எதிர்ப்பு மதவெறியை முறையாக அங்கீகரிப்பதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டால், ஜார்ஜியாவின் தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்து, இந்து வெறுப்பை வெளிப்படையாக வரையறுக்கும் மற்றும் அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் தொடர்பான குற்றங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்.
இந்த மசோதா, மதம், இனம், நிறம், அயல் நாட்டவர் என்ற வேறுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களின் கீழ் வரும். தொடர்ந்து சட்டம் நிறைவேற்றப்பட்டதும் விரைவில் அமலுக்கு வரும். இதனை தொடர்ந்து ஹிந்து மதம் ஹிந்துக்கள் மீதான வெறுப்பு செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியிலான கடும் நடவடிக்கைள் பாயும். தண்டனை குறித்த விவரம் ஏதும் வெளியாகவில்லை.
குடியரசு கட்சி சார்பில் சுவாண்ட் டில், கிளிண்ட் டிக்சன், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜேசன் எஸ்டீவ்ஸ், இம்மானுவேல் ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து இந்த மசோதாவை செனட் சபையில் அறிமுகம் செய்தனர்.
' சமீபத்திய ஹிந்துக்கள் மீதான வெறுப்பை தவிர்க்க இந்த புது சட்டத்தை அறிமுகம் செய்வதாகவும், இது தொடர்பாக மகிழ்வும், பெருமையும் கொள்கிறோம்' என்றும் சபையில் தெரிவித்தனர். உலகில் 100 கோடிக்கும் மேலானவர்கள் பின்பற்றும் ஹிந்து மதம் என்றும், இது உலகில் பழமையான மதங்களில் ஒன்று என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
.png)