1. Home
  2. தமிழ்நாடு

இந்திய வரலாற்றில் முதன்முறையாக... காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த திருமணம்..!

1

விழுப்புரம் மாவட்டம் வி.பூதூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். புதுச்சேரி ஆண்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த அன்பரசிக்கும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று திருமணம் நடந்தது. மணமகன் பிரகாஷ் வேலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகவும், மணமகள் அன்பரசி திருபுவனையில் தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங் தலைவர் வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் மாங்கல்யம் எடுத்து கொடுக்க காங்கிரஸ் தொண்டர்கள் முன்னிலையில் சுதந்திர தினத்தில் திருமணம் நடந்தது.

வைத்திலிங்கம் பேசும்போது, "ராகுல் காந்தி முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற வேண்டுமென இருவரும் விரும்பியதாகவும், ஆனால் அதற்கான சூழல் அமையாத நிலையில், தற்போது கட்சி அலுவலகத்தில் அனைவரது ஆதரவோடும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்" என்றார்.

திருமணத்தை நடத்தி வைத்த நாராயணசாமி பேசுகையில், சுதந்திர தினத்தை அன்று திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இது சுதந்திரம் அல்ல. இனி அடிமையாக போகிறார் என கூறி சிரித்தார். கோயில் வேண்டாம் உங்களது வீட்டில் திருமணம் செய்து கொள்கிறோம் என்று கூறினார்கள். எனக்கு வீடு காங்கிரஸ் தான். எனவே காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வாருங்கள் எனக்கூறி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம். அவர்களுக்கு மிக எளிமையாக மந்திரம் இல்லை.சோனியா-ராகுல் பெயரை சொல்லி திருமணம் நடந்துள்ளது. இந்திய வரலாற்றில் காங்கிரஸ் அலுவலகத்தில் திருமணம் நடந்தது இதுவே முதல் முறை என நாராயணசாமி தெரிவித்தார்.தான் பெண் வீட்டார் என்றும் வைத்திலிங்கம் மணமகன் வீட்டார் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like