இந்திய வரலாற்றில் முதல்முறை! போர்க்கப்பலில் பணியாற்ற 2 பெண்கள் நியமனம்!!

இந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் பணியாற்றி 2 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடற்படையில் பல பிரிவுகளில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தாலும் போர்க்கப்பல்களில் இதுவரை நியமிக்கப்பட்டதில்லை.
இந்நிலையில் சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி, சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகியோர் போர்க்கப்பல்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் கடற்படையின் புதிய எம்.எச் -60 ஆர் ஹெலிகாப்டர்களில் பறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
இந்திய விமானப்படை ஒரு பெண் போர் விமானியை தனது ரஃபேல் போர் விமானத்தில் நியமித்தது. தற்போது இந்திய கடற்படை பெண் அதிகாரிகளை நியமித்து உள்ளது. 10 போர் விமானிகள் உட்பட 1,875 பெண்கள் சேவையில் உள்ளனர். 18 பெண் அதிகாரிகள் நேவிகேட்டர்களாக உள்ளனர்.
news.tm