முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு..!
தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பதிவு மற்றும் தரவரிசையின் துல்லியத்தை உறுதி செய்யும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் முதன்முறையாக டிஜிட்டல் தேர்வுமுறை அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய தேர்வு முறையால், வெளிப்படைத்தன்மை மேம்படுத்தப்படுவதோடு, விளையாட்டு வீரர்கள் தங்கள் செயல்திறன் அளவீடுகளை ஒப்பீடு செய்து கொள்ளவும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியின் கீழ், விளையாட்டு வீரர்களின் தரவுகள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படுவதால் வீரர்களும் உடனுக்குடன் தங்கள் மதிப்பீட்டை அறிய உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.