கேரளாவில் முதல் முறையாக கொச்சியில் உணவு சாலை..!
மத்திய அரசின் 100 ஃபுட் ஸ்ட்ரீட்களை மேம்படுத்தும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில், இந்த முயற்சி கிரேட்டர் கோச்சி டெவலப்மெண்ட் ஆத்தாரிட்டி , கோச்சி மாநகராட்சி, நேஷனல் ஹெல்த் மிஷன், மற்றும் மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் கூட்டாண்மையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஃபுட் ஸ்ட்ரீட்டின் முக்கிய நோக்கம், தெரு உணவு பற்றிய மக்களின் எண்ணத்தை மாற்றுவதாகும். சுவை மட்டுமல்லாமல், சுத்தமான சூழல், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதே இதன் தனித்துவம். கேரளாவின் சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இதை திறந்து வைத்து பேசுகையில், கேரளாவை உலக மக்கள் பாதுகாப்பாகவும் சுவையாகவும் உணவு அனுபவிக்கக் கூடிய உணவு தலமாக மாற்றுவதே எங்கள் நோக்கம். இதுவே அதன் தொடக்கம் எனக் கூறினார்.
இந்த திட்டம் மத்திய அரசின் 60% நிதி, மாநிலத்தின் 40% பங்கு, மேலும் ஜி.சி.டி.ஏ-வின் ரூ.30 லட்சம் நிதியுதவி ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- உணவு வகைகள்
- கஸ்தூர்பா நகர் ஃபுட் ஸ்ட்ரீட்டில்,
- புதிதாக ஆவியில் வேகவைக்கும் புட்டு, அப்பம்,
- காரமான கடல் உணவுகள்,
- சைவ உணவுகள்,
- பழச்சாறுகள், ஆரோக்கிய பானங்கள்,
- நவீன ஃப்யூஷன் ஸ்ட்ரீட் உணவுகள் வரை பரிமாறப்படுகின்றன.
அனைத்து உணவுகளும் சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களின் சுத்தமான சமையலறைகளில், தரமான பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. உணவு பாதுகாப்புத் துறையின் காலமுறை ஆய்வுகள் மூலம் சுகாதாரம் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.png)