காதலிக்க மறுத்ததால்.. பிரபல சின்னத்திரை நடிகைக்கு சரமாரி கத்திக்குத்து! இளைஞர் வெறிச் செயல் !
காதலிக்க மறுத்ததால்.. பிரபல சின்னத்திரை நடிகைக்கு சரமாரி கத்திக்குத்து! இளைஞர் வெறிச் செயல் !

மும்பையில் சின்னத்திரை நடிகை மால்வி மல்கோத்ராவை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை மால்வி மல்கோத்ரா. இவர் இந்தி சீரியல்களில் கலக்கி வருகிறார். இதனால், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில், இவர் சூட்டிங் முடிந்து தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது காரை ஒருவர் இளைஞர் வழிமறித்து, தன்னை ஒரு தயாரிப்பாளர் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும், மால்வி மல்கோத்ராவை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொண்டால் மால்வி மல்கோத்ராவிக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மல்கோத்ரா அவரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நடிகை மல்கோத்ராவை சரமாரியாக குத்தினார். இதில், அவரது வயிறு, கைளில் படுகாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக நடிகை மல்கோத்ரா அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கத்தியால் குத்திய நபர் குறித்து விசாரணை நடத்தி, யோகேஷ் என்ற இளைஞரை கைது செய்தனர்.