1. Home
  2. தமிழ்நாடு

2 தவணை தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு.. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு..!

2 தவணை தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு.. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு..!


இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்க புதுச்சேரி சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பு செயலர் புனித மேரி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: “கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அரசு அலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. அதன்படி, புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் (ஒப்பந்த ஊழியர்கள் உள்பட) அனைவரும் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாமல் விடுப்பு வழங்க வேண்டும். இதில் எந்த விதிவிலக்கின்றி செயல்படுத்தலாம்.

புதுச்சேரி அரசு துறைகளின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இணங்க அரசு செயலர்கள், துறைத்தலைவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும்.

இதுகுறித்த அறிக்கையை வருகிற 7-ம் தேதிக்குள் தலைமைச் செயலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like