1. Home
  2. தமிழ்நாடு

ரூ.50,000-க்கு மேல் காசோலை பரிவர்த்தனைக்கு வங்கியில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்... ஆர்பிஐ அதிரடி திட்டம் !

ரூ.50,000-க்கு மேல் காசோலை பரிவர்த்தனைக்கு வங்கியில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்... ஆர்பிஐ அதிரடி திட்டம் !


வங்கியில் பணம் எடுக்க டிஜிட்டல் முறை, ஏடிஎம் என பல முறைகள் இருந்தாலும் காசோலை பரிவர்த்தனை மிகமுக்கியதாகவே உள்ளது. எனினும் காசோலை பணப் பரிவர்த்தனையில் பல்வேறு பிரச்னைகளும், நடைமுறை சிக்கல்களும், தகவல் பரிமாற்றம் தாமதமும் ஏற்படுவதால் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது.

இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக 50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான தொகைக்கான காசோலை பரிவர்த்தனை செய்யும்போது அதுதொடர்பாக வங்கிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரூ.50,000-க்கு மேல் காசோலை பரிவர்த்தனைக்கு வங்கியில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்... ஆர்பிஐ அதிரடி திட்டம் !

இதற்காக, ‘காசோலை துண்டிப்பு முறைஎன்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த திட்டம் தற்போதே அறிவிக்கப்பட்டாலும் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதலே அமலுக்கு வரவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன் எஸ்எம்எஸ், மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் ஆகியவை மூலம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதில் பணத்தை பெறுபவரின் பெயர், தொகை, தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை வங்கிகள் செய்ய வேண்டும். இந்த முறை மூலம் யாருக்கு காசோலை தரப்படுகிறது. அந்த காசோலை உண்மையானதா என்பன உள்ளிட்ட தகவல்கள் உறுதி செய்யப்படும்.

இதேபோல், ரூ. 5 லட்சத்திற்கு அதிகமான தொகை உள்ள காசோலைகளுக்கு இந்த முறை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் காசோலை முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும் என்பதால் இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like