1. Home
  2. தமிழ்நாடு

உணவு பாதுகாப்புத் துறை அதிரடி..! இனி பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தத் தடை..!

1

சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களின் பயன்பாட்டைத் தடுக்க இந்த நடவடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உணவுப் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன. இவை மக்கும் தன்மை அற்றவை என்பதால், கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவு மேலாண்மை பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கின்றன என்றும் உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. சில நாடுகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களின் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களில் மற்றும் நிறம் கலந்த சில்வர் பேப்பர்களில் உணவுகளைப் பார்சல் செய்யக்கூடாது என ஏற்கனவே உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஜூஸ் கடைகளில் வழங்கக்கூடிய ஜூஸ் ஸ்ட்ராக்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தச் சூழலில், ஜூஸ் கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை உடனடியாக நிறுத்த வேண்டும். உணவு பாதுகாப்புத் துறை சட்டத்தின்படி, பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜூஸ் கடை உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் இளநீர் கடை உரிமையாளர்கள் இந்த உத்தரவைப் பின்பற்ற வேண்டும். தவறினால், உணவு பாதுகாப்புத் துறை சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like