இன்று முதல் உணவு டெலிவரி சேவை நிறுத்தம்? வெளியான அதிர்ச்சி தகவல்!

ஸ்விகி,சொமேட்டோ நிறுவனங்கள் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு மாதிரி கமிஷன் பெறுகின்றார்கள். ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு விதமான கமிஷன் வித்தியாசம் இருப்பதாகவும்,ஒரு வாரம் கழித்து தான் கடை உரிமையாளருக்குப் பணம் வரும். இந்த நிலையில், அந்த வியாபாரம் நிலைப்பாட்டைப் பார்க்கும்போது ஹோட்டல் உரிமையாளர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக நாமக்கல் பேக்கரி மற்றும் ஹோட்டல் உரிமையார்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று (ஜூலை 01) முதல் நாமக்கல் மாவட்டத்தில் ஸ்விகி, சோமேட்டோ மூலம் உணவு வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை உணவு டெலிவரி தொடர்பாக ஸ்விகி,சொமேட்டோ உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இன்றைய தினம் (ஜூலை 01) பேச்சுவார்த்தையில் சமூகமான தீர்வு எட்டப்படவில்லை என்றால், சென்னையிலும் உணவு டெலிவரி வழங்கப்படாது என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சென்னை மாவட்டத் தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.