1. Home
  2. தமிழ்நாடு

"கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடகாவை பின்பற்றுங்கள்" : மத்திய அரசு அறிவுறுத்தல்!

"கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடகாவை பின்பற்றுங்கள்" : மத்திய அரசு அறிவுறுத்தல்!


கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடகா செயல்படுத்தும் நடைமுறைகளை மற்ற மாநிலங்களும் பின்பன்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக கர்நாடக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. அதில் கர்நாடகா அரசின் பல்வேறு துறைகள் இணைந்து தொழில் நுட்பம் சார்ந்த உதவியுடன் தொற்றுநோய் பரவுவதை வெற்றிகரமாக தடுத்து வருகிறது. இந்த சிறந்த நடைமுறைகளை மற்ற மாநிலங்களும் பின்பற்றி செயல்படுத்த வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் தொடர்புகளை கண்டறிவதுதான் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான தற்போதைய வழி. கர்நாடகாவில் பாதிக்கப்பட்டவரின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளின் எண்ணிக்கை மிகத் துல்லியமாகக் கண்டறியப்பட்டு கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.


கர்நாடகாவில் கட்டாய தனிமைப்படுத்துதல் மூலம் அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. கர்நாடகாவிற்கு திரும்பி வருவோர் அனைவரும் அரசு செயல்படுத்தியுள்ள சேவா சிந்து என்ற இணைய பக்கத்தில் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது அடுத்த சில நாட்களுக்கு சம்பந்தப்பட்ட நபர், வீட்டில் அல்லது நிறுவனத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளரா என்பதை கண்காணிக்க அரசுக்கு உதவுகிறது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like