1. Home
  2. தமிழ்நாடு

மக்களே இரவில் வானத்தை பாருங்க..மே 14 வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் தெரியும்..!

1

மே 14ஆம் தேதி வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பூமியில் இருந்தபடியே வெறும் கண்களால் பாரக்க முடியும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தெரிவித்துள்ளது.

எந்தெந்த பகுதிகளிலிருந்து நாசாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்றிரவு வெறும் கண்களால் பார்க்க முடியும் என்ற அறிவிப்பினை நாசா வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தமிழகத்தின் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து பல இடங்களில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தெரிந்துள்ளது. மேகக் கூட்டம் காணப்படாத இடங்களில் மக்கள் வெறும் கண்களால் சர்வதேச ஆய்வு மையத்தைக் கண்டுள்ளனர். இன்னும் சில நாள்களுக்கு தெரியும் என்பதால் பல்வேறு பகுதி மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இன்றிரவு 7.09 மணியிலிருந்து சில நிமிடங்களுக்கு வானில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் பல்வேறு நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியை சுற்றி வருகிறது. சர்வதேச விண்வெளி மையம் குறிப்பிட்ட பகுதியில் வானில் தெரியும் நேரம் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டு வருகிறது. பொதுவாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வான்வெளி தெளிவாக இருக்கும்போது மட்டும் நகர்ந்துகொண்டிருக்கும் சிறிய ஒளிப் புள்ளியாக விண்வெளி ஆய்வு மையத்தை மனிதர்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும். 

இந்த நிலையில்தான் சென்னையிலிருந்து வெறும் கண்களால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்க்க முடியும் என்று நாசா அறிவித்துள்ளது. மே 14ஆம் தேதி வரை இந்த வாய்ப்பு தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. மேகக் கூட்டங்கள் ஒத்துழைத்தால் மக்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தைக் காணலாம். எப்போது நமது பகுதியில் விண்வெளி மையம் தெரியும் என்பது குறித்து அறிந்து கொள்ள நாசாவின் ‘ஸ்பாட் தி ஸ்டேஷன்’ என்கிற இணையத்தளத்தை அணுகலாம். சூரிய ஒளி படும்போது இந்த விண்வெளி மையம் ஒளிர்வதாகவும் அதனால் மாலை அல்லது அதிகாலை நேரங்களில் தென்படுவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like